close
Choose your channels

அடுத்த வாரத்தில் இருந்து சும்மா பட்டாசு வெடிக்கும்: 'வாரிசு' படக்குழுவின் அதிரடி அறிவிப்பு

Monday, October 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்துவரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் சற்றுமுன் ‘வாரிசு’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள புதிய அட்டகாசமான போஸ்டரின் மூலம் பொங்கல் ரிலீஸ் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளனர்.

இந்த போஸ்டரில் விஜய் ஆக்ரோஷமாக கையில் ஆயுதத்துடன் நிற்பது போலவும் சுற்றி உள்ளவர்கள் அவரிடம் அடி வாங்கி கீழே விழுந்து கிடப்பது போலவும் உள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போஸ்டரில் ‘ஹேப்பி தீபாவளி நண்பா.. அடுத்த வாரத்தில் இருந்து சும்மா பட்டாசு வெடிக்கும்' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அடுத்த வாரத்திலிருந்து இந்த படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos