close
Choose your channels

நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தமிழ் நடிகை… வைரலாகும் புகைப்படம்!

Monday, February 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான “பரதேசி“ திரைப்படத்தில் உருண்டையான கண்களை வைத்துக்கொண்டு தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர்தான் நடிகை வேதிகா. அதற்குப் பிறகு ஒருசில தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த இவர் சமூகவலைத் தளங்களில் எப்போதும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டு இருக்கும் நீச்சல்உடை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவரும் நடிகை வேதிகா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் தமிழில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான “மதராசி“ திரைப்படத்தில் அறிமுகமாகி பின்னர் “காளை“, “முனி“, காவ்ய தலைவன்“, “பரதேசி“ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு தமிழ் சினிமாக்களில் தலைக்காட்டாத இவர் தற்போது பிரபவுதேவா தயாரிப்பில் உருவாகி வரும் “வினோதன்“ எனும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் தெலுங்கில் “jungle“ எனும் திரைப்படத்திலும் கன்னடத்தில் “Home minister“ எனும் திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மாலத்தீவு சென்றுள்ள வேதிகா முதல்முறையாக நீச்சல் உடையணிந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே ஸ்லிம் பியூட்டி என்று ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் இவர் தற்போது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதால் ரசிகர்கள் குஷியாகி அவரது புகைப்படத்திற்கு லைக்ஸ்குகளை குவித்து வருகின்றனர். மேலும் 30 வயதிலும் எப்படி உங்களால் இவ்வளவு இளமையாக இருக்க முடிகிறது என்றும் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.