close
Choose your channels

'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய டைட்டில்: சிம்பு அறிவிப்பு!

Saturday, September 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் ட்ரைலர் ரிலீசுக்கு பின்னர் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் தெலுங்கு டைட்டிலை சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். தெலுங்கில் இந்த படம் ’ தி லைஃப் ஆப் முத்து’ என்ற டைட்டிலில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் ஷ்ராவந்த் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு சித்தார்த்தா ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.