வெற்றிமாறனின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்-இயக்குனர்!
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் தற்போது சூரி நடித்து வரும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதனை அடுத்து அவர் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் இயக்குனர்கள் பட்டியலில் வெற்றிமாறன் பெயரும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. வெற்றிமாறன் கதை திரைக்கதையில் சசிகுமார் நடிக்க இருக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் மற்றும் கதிரேசன் அவர்களின் பைவ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறனுடன் ஃபைவ்ஸ்டார் கதிரேசன் மூன்றாவது முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர், இசையமைப்பாளர் உள்பட தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.