close
Choose your channels

வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் படத்தின் சூப்பர் அப்டேட்!

Thursday, July 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் பிரபல நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரும் இணையும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் அதிகாரபூர்வமாக வெளி வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகயிருக்கும் இந்த படத்தின் கதையை வெற்றிமாறன் எழுதி இருப்பதாகவும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ’அதிகாரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் என்று இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஒரே நேரத்தில் பல மொழிகளில் உருவாகும் பான் - இந்தியா படம் என்றும் கூறப்பட்டது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் கதிரேசன் அதிகாரபூர்வமாக சூப்பர் அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை எதிர்பார்க்கலாம் என்றும், தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான தமன், பான் - இந்தியா படத்திற்காக சரியான இசையமைப்பாளர் எனவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.