close
Choose your channels

கோலிவுட்டில் தொடர்ந்து விஜய் முதலிடம்: அடுத்தடுத்த இடங்களில் யார் யார்?

Thursday, May 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் மாஸ் நடிகர்களாக அஜித் மற்றும் விஜய் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில் தளபதி விஜய் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவதும் ’மாஸ்டர்’ திரைப்படம் குறித்த செய்திகள் தினமும் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருவதும் விஜய் முதலிடத்தில் தக்க வைத்துக் கொண்டதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இரண்டாவது இடத்தில் தல அஜித் உள்ளார். தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் இல்லாத நிலையிலும் அஜித்தின் ரசிகர்கள் அவ்வப்போது அஜித் குறித்த செய்திகளை வைரலாக்கி வருவதே அவர் இரண்டாவது இடத்தில் இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.

விஜய் அஜித்தை அடுத்து மூன்றாவது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளார். 'அண்ணாத்த’ படம் குறித்த செய்திகள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருவதை அவர் இந்த இடத்தை பிடித்ததற்கு காரணம். இதனையடுத்து சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், விக்ரம் மற்றும் கார்த்தி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தமிழ் திரையுலக நாயகிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்ளார். இரண்டாவது இடத்தில் த்ரிஷாவும், மூன்றாவது இடத்தில் சமந்தாவும், நான்காவது இடத்தில் தமன்னாவும், ஐந்தாவது இடத்தில் கீர்த்தி சுரேஷூம் உள்ளனர். கோலிவுட் திரையுலகில் விஜய்யும் நயன்தாராவும் முதலிடத்தை பிடித்திருப்பதை அவர்களின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.