close
Choose your channels

காதலரை கைப்பிடித்த நடிகை விஜய், கவின் பட நடிகை: திருமண புகைப்படங்கள்..!

Wednesday, April 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய், கவின் படங்களில் நடித்த நடிகை தனது காதலரை இன்று திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ கவின் நடித்த ’டாடா’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அபர்ணாதாஸ் மலையாளத்தில் சில படங்கள் நடித்துள்ளார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் நடிகை அபர்ணாதாஸ் மற்றும் ’மஞ்சம்மெல் பாய்ஸ்’ படத்தில் நடித்த தீபக் பரம்போல் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் நேற்று ஹல்தி கொண்டாட்டம் நடந்த நிலையில் இன்று திருமணம் சிறப்பாக நடைபெற்ற நிலையில் திருமண புகைப்படங்கள் இருவரது இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த புகைப்படங்களை அடுத்து ரசிகர்கள் இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த திருமணத்தில் பல மலையாள திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அபர்ணாதாஸ் - தீபக் ஆகிய இருவரும் மலையாளத்தில் ’மனோகரம்’ என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் அதன் பின் காதல் வயப்பட்டு தற்போது தம்பதிகள் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.