close
Choose your channels

தெலுங்கில் ரீமேக் ஆகிறதா விஜய்யின் சூப்பர்ஹிட் படம்?

Wednesday, April 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய்,சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன் நடிப்பில், அட்லி இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், ஜி வி பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம் ’தெறி’.

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

விஜய் நடித்த விஜயகுமார் என்ற அட்டகாசமான போலீஸ் அதிகாரி கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிக்க இருப்பதாகவும் மற்ற கேரக்டரில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழில் சூப்பர் ஹிட் ஆனது போல் இந்த படம் தெலுங்கிலும் ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.