close
Choose your channels

அட்டகாசமான பாடலுக்காக சுவிஸ் நாட்டில் விஜய்-கீர்த்திசுரேஷ்

Saturday, October 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடிப்பில் பரதன் இயக்கி வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் ஒரே ஒரு வெளிநாட்டு பாடல் படப்பிடிப்பு மட்டுமே பெண்டிங் உள்ளதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்நிலையில் விஜய், கீர்த்திசுரேஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளனர். ஒரு வாரம் இந்த பாடல் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் சுவிஸ் நாட்டில் இயற்கை எழில் சூழ்ந்துள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறும் இந்த பாடல், திரையில் அட்டகாசமாக காட்சியளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.