close
Choose your channels

ராகவா லாரன்ஸின் 'மொட்டசிவா கெட்டசிவா' ரிலீஸ் தேதி

Saturday, October 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு வெளியான ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 2' மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான 'மொட்டசிவா கெட்டசிவா' தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
இந்த படம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தேதியில் ஜெயம் ரவியின் 'போகன்', விஜய்சேதுபதியின் 'கவண்' உள்பட ஒரு சில படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த தேதியில் 'மொட்டசிவா கெட்டசிவா' படமும் இணணந்துள்ளது.
ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாய் ரமணி இயக்கியுள்ளார். இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'பட்டாஸ் ' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் என்பவர் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.