close
Choose your channels

நமக்காகத்தான் அரசாங்கம்: அரசாங்கத்திற்காக நாம் இல்லை: விஜய்சேதுபதி

Monday, December 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடித்த 'சீதக்காதி' திரைப்படம் வரும் 20ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய்சேதுபதி, அய்யா ஆதிமூலம் என்ற மாஸ் கேரக்டரில் நடித்துள்ளார். நடிப்பு வெறியரான விஜய்சேதுபதி இந்த படத்தில் அய்யா ஆதிமூலம் கேரக்டருக்காக வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார்.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் புரமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வெறும் 15 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவில் விஜய்சேதுபதி, 'எனக்காக, உங்களுக்காக, நமக்காகத்தான் அரசாங்கமே தவிர, அரசாங்கத்துக்காக நம்ம இல்ல. சரிதானே? என்று பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. இன்றைய அரசியல் நிலைமையை தெள்ளத்தெளிவாக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள இந்த வசனம் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது. இந்த ஒரே வசனத்தால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது.

விஜய்சேதுபதி, அர்ச்சனா, மகேந்திரன், மெளலி, பகவதி பெருமாள், ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை 'பாஷன் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.