close
Choose your channels

தமிழ் சினிமாவின் பொக்கிஷ இயக்குனருடன் இணையும் விஜய்சேதுபதி

Sunday, February 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமா பல வருடங்களாக குடும்பப்பாங்கான கதைகளை மறந்துவிட்டு ஜனரஞ்சக படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் சமுதாய கருத்துக்களுடன் கூடிய குடும்பப்பாங்கான பல படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் சேரன். நடிகர், இயக்குனர் என இருவித அவதாரங்களில் ஜொலித்த இவரது பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் ஆகிய படங்கள் மிகச்சிறந்த வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் சேரனுடன் விஜய்சேதுபதி இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே சமீபத்தில் 'தர்மதுரை' என்ற குடும்பப்பாங்கான படத்தில் நடித்து ஹிட் கொடுத்த விஜய்சேதுபதி தற்போது மீண்டும் ஒரு குடும்ப்பாங்கான பொக்கிஷ இயக்குனருடன் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்த அறிவிப்பு மிகவிரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.