close
Choose your channels

டீன் ஏஜ் பொண்ணு மாதிரியே இருக்காங்களே: 36 வயது டிடியின் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்!

Monday, April 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பது தெரிந்ததே. கடந்த 1999ஆம் ஆண்டு ’உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான டிடி அதன் பின்னர் சன் டிவியில் ஒருசில நிகழ்ச்சிகளிலும் அதன் பின்னர் விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாக தொகுப்பாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

காபி வித் டிடி மற்றும் ஜோடி நம்பர் 1 ஆகிய நிகழ்ச்சிகள் பிரபலமானதற்கு இவருடைய சிறப்பான பங்களிப்பும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களையும் வீடியோக்களை வெளியிட்டு உள்ளார்

இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் ’இவருக்கு 36 வயது என்றால் நம்பவே முடியவில்லை என்றும், இன்னும் டீன் ஏஜ் பொண்ணு போல் இருக்கிறார் என்று பலரும் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். வெள்ளை உடையில் தேவதை போன்று இருக்கும் டிடியின் புகைப்படங்களுக்கும், வீடியோவுக்கும் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.