close
Choose your channels

போண்டாமணி குடும்பத்திற்கு முதல் நபராக நிதியுதவி செய்த விஜயகாந்த்.. எவ்வளவு தெரியுமா?..

Monday, December 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காமெடி நடிகர் போண்டா மணி நேற்று காலமானதை அடுத்து அவரது குடும்பத்திற்கு முதல் நபராக கேப்டன் விஜயகாந்த் நிதி உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த காமெடி நடிகர் போண்டா மணி நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் அவருடைய இல்லத்தில் நேற்று வைக்கப்பட்டிருந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் போண்டாமணி மறைவை கேள்விப்பட்ட விஜயகாந்த் உடனடியாக அவரது குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி வழங்கி உள்ளார். இந்த பணத்தை நடிகர் மீசை முருகேசன், போண்டாமணி மனைவி மற்றும் மகனிடம் அளித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜயகாந்த் தன் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பவர் என்று போண்டாமணி பல பேட்டிகளில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது வீட்டில் தனது தந்தை மட்டுமே சம்பாதித்து வந்த நிலையில் தன்னுடைய குடும்பத்திற்கு நடிகர் சங்கம் உதவ வேண்டும் என போண்டாமணியின் மகன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் முதல் நபராக விஜயகாந்த் உதவியுள்ளார். இதனை அடுத்து அடுத்தடுத்து வேறு சில நடிகர்களும், நடிகர் சங்கத்தில் உள்ள நிர்வாகிகளும் உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos