close
Choose your channels

காந்தி மாதிரி ஒரு மஹானா வாழ்வியா காந்தி மஹான்? விக்ரமின் 'மஹான்' டீசர்

Monday, January 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மஹான்’ திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

காந்தி மாதிரி ஒரு மஹானா வாழ்வியா காந்தி மஹான்? என ஆரம்ப காட்சியில் ஆடுகளம் நரேன் தனது மகனை பார்த்து கேட்கும் கேள்வியும் அந்த மகன் தான் விக்ரமாக பின்னாளில் மாறுகிறார் என்றும் கதை ஆரம்பிக்கிறது

காந்தி மாதிரி ஒரு மஹானா வாழ்வேன்’ என தனது தந்தையிடம் வாக்குறுதி கொடுத்த விக்ரம் காந்தி மகான் மாதிரி வாழ்ந்தாரா? அல்லது அதற்கு நேரெதிராக வாழ்ந்தாரா? என்பதுதான் இந்த படத்தின் கதை என டீசரில் இருந்து தெரிய வருகிறது

இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான விக்ரமின் கெட்டப் மற்றும் நடிப்பை இந்த படத்தில் பார்க்க முடிகிறது. அதேபோல் டீசரின் கடைசி காட்சியில் வரும் துருவ் விக்ரம், இந்தப் படத்தில் மிரட்டலாக நடித்து இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இன்று வெளியாகியுள்ள இரண்டு நிமிட டீஸர், ‘மஹான்’ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் வரும் பத்தாம் தேதி அமேசானில் வெளியாக உள்ளது. விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.