close
Choose your channels

சியான் விக்ரமின் 'மஹான்' ரன்னிங் டைம் இவ்வளவா? ரிலீஸ் தேதி எப்போது?

Saturday, January 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்த ‘மஹான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் வழங்கி உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ‘மஹான்’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ‘மஹான்’ படம் அமேசான் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அனேகமாக ஜனவரி 26 அல்லது பிப்ரவரி முதல் வாரம் இந்த படம் அமேசானில் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், துருவ் விக்ரம், வாணிபோஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.