விக்ரம் நடிக்கும் அடுத்த பட டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு
10 எண்றதுக்குள்ள படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் நாயகிகளாக நயன்தாரா, நித்யாமேனன் நடிக்கவுள்ளதாகவும் வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று அதிகாலை 12 மணிக்கு இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
விக்ரம் இருவேடங்களில் நடிப்பதாக கூறப்படும் இந்த படத்திற்கு 'இருமுகம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இயக்குனர் ஆனந்த்சங்கரின் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் பல யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு விஞ்ஞானம் கலந்த ஆக்சன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது