close
Choose your channels

விஷால், ஆர்யாவின் 'எனிமி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Monday, September 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த ‘எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது, இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ‘எனிமி’ படம் ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதுகுறித்த அட்டகாசமான போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. விஷால் மற்றும் ஆர்யா ஆக்ரோஷமாக இருக்கும் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் உள்பட பல நடித்த இந்த திரைப்படத்தின் பாடல்களுக்கு எஸ்.தமன் அவர்களும் பின்னணி இசையை சாம்.சி.எஸ் அவர்களும் அமைத்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் எஸ் வினோத்குமார் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.