close
Choose your channels

ஆன்லைன் பைரசி: குற்றவாளியின் முகத்திரையை கிழிக்கப் போகும் விஷால்

Wednesday, July 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷால் நடிப்பில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சற்று முன் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். .

அப்போது திரையுலகையே பயமுறுத்தி கொண்டிருக்கும் ஆன்லைன் பைரசி (புதிய படங்களை இணையத்தில் பதிவேற்றுதல்) குறித்த முக்கிய தகவல் ஒன்றை அவர் தெரிவித்தார். புதிய படங்களை முதல் நாளே இணையத்தில் பதிவேற்றுபவர்கள் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டதாகவும், அவர்களது விவரங்களை இன்னும் இரண்டு வாரங்களில் வெளிப்படையாக அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க தேர்தலின்போது தன்னுடைய அணி வெற்றி பெற்றால் திருட்டு டிவிடி தயாரித்து விற்பவர்களையும் ஆன்லைன் பைரசியில் ஈடுபடுபவர்களையும் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.