close
Choose your channels

விஜய்யையும் இயக்குவேன்: 'விவேகம்' இயக்குனர் சிவா

Thursday, June 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தை இயக்கி வரும் இயக்குனர் சிவா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்-விஜய் ஆகிய இருவருக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கியதோடு, விரைவில் விஜய் படத்தையும் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.
அவர் அந்த பேட்டியில் கூறியதாவது: அஜித், விஜய் இருவருமே தங்களது பலங்களை நன்கு அறிந்திருப்பவர்கள். இருவருமே அதிகம் பேசமாட்டார்கள். பெரிய நட்சத்திரங்களாக அவர்கள் இருப்பதற்கு இதுவும் முக்கியமான காரணம்.
நடிகர் விஜய்யை பலமுறை நேரில் சந்தித்துள்ளேன். எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. விரைவில் அவரை இயக்குவேன். விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் வெற்றி ரகசியமே கடின உழைப்பு தான்' என்று கூறினார்.
அஜித்தின் அடுத்த படத்தையும் சிவா தான் இயக்குவார் என்று கூறப்படும் நிலையில் தளபதி விஜய்யை அவர் இயக்க கனியும் காலம் எப்போது வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.