close
Choose your channels

சமுத்திரக்கனியின் அடுத்த படத்தில் விஜே ரம்யா

Thursday, January 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொலைக்காட்சி தொகுப்பாளர் விஜே ரம்யா ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது சமுத்திரக்கனியின் அடுத்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

'அங்காடித்தெரு' படத்திற்கு பின்னர் ஜவுளிக்கடையை மையமாக வைத்து தயாராகவுள்ள திரைப்படம் 'சங்கத்தலைவன்'. பாரதிநாதன் என்பவர் எழுதிய 'தறி' என்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது விஜே ரம்யா இணைந்துள்ளார்.

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கும் இந்த படத்தை மணிமாறன் இயக்கவுள்ளார். வரும் 22ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.