close
Choose your channels

பாண்டவர் அணியில் எங்களுக்கு ஸ்லீப்பர்செல்கள் உள்ளனர்.  பாக்யராஜ் அணி

Tuesday, June 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் விஷாலின் பாண்டவர் அணிக்கு போட்டியே இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஒரே வாரத்தில் உருவான கே.பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி, பாண்டவர் அணிக்கு கடும் போட்டி கொடுத்து வருகின்றது.

இந்த நிலையில் பாண்டவர் அணியில் தங்களுக்கு ஸ்லீப்பர்செல்கள் இருப்பதாகவும் அவர்கள் தங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும் சங்கரதாஸ் அணியின் உதயா, கணேஷ் மற்றும் நடிகை ஆர்த்தி ஆகியோர் புதுக்கோட்டையில் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்,.

விஷால் அணியில் தவறு நடக்கின்றது என்பதால்தான் புதிய அணி உருவாகியதாகவும், விஷால் தன்னுடைய இமேஜை வளர்த்து கொள்ளவே நடிகர் சங்கத்தை பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

மேலும் ராதாரவி உள்பட ஒட்டுமொத்த நடிகர்களும் தங்கள் அணிக்கு ஆதரவு தந்திருப்பதாகவும், வெற்றி பெற்ற பின்னர் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் மறைந்த நடிகர் ஜே.கே.ரித்திஷ் அவர்களின் ஆன்மா எங்களுக்கு துணையாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.