close
Choose your channels

நயன்தாரா-சமந்தா: 'விஜய் 63' படத்தின் நாயகி யார்?

Tuesday, November 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று பிரமாண்டமாக வெளியாகி வசூலை அள்ளிக்குவித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.

அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், தற்போது இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அட்லி இயக்கிய 'தெறி' மற்றும் 'மெர்சல்' ஆகிய படங்களின் நாயகியான சமந்தா, மீண்டும் விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. இன்னும் ஒருசில நாட்களில் நாயகி யார்? என்பது முடிவு செய்யப்பட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

மேலும் 'மெர்சல்', சர்கார்' படங்களுக்கு பின் மீண்டும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.