close
Choose your channels

'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா?

Saturday, January 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்பதும் இந்த படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ஐதராபாத், சென்னை, மும்பை, ,திருவனந்தபுரம் உள்பட இந்தியா முழுவதும் பிரமாண்டமாக புரமோஷன் நிகழ்ச்சிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் புரமோஷன் நிகழ்ச்சிக்காகவே கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக நேற்று தமிழக அரசு 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்து உள்ளது. இதனால் திரையுலகினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த மாதம் ரிலீசாக வேண்டிய ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ’வலிமை’ திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.