close
Choose your channels

நடிகர் சித்தார்த் சுக்லா மரணத்திற்கு WWE ஜான்சேனாவின் ரியாக்சன்!

Saturday, September 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகரும் பிக்பாஸ் டைட்டில் வின்னருமான சித்தார் சுக்லா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த சம்பவம் இந்திய திரையுலகினரை உலுக்கியது. 40 வயதான சித்தார்த்தின் மரணம் குறித்து இரங்கல் தெரிவிக்காத நடிகர்களே இல்லை என்றும் கூறலாம். தமிழ் நட்சத்திரங்கள் பலர் சித்தார்த் சுக்லா மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற WWW நட்சத்திரம் ஜான்சேனாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்தார்த் சுக்லா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஜான் சேனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொரு வாரமும் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் சித்தார்த் சுக்லாவின் புகைப்படத்தை பகிர்ந்து தனது அஞ்சலியை செலுத்தி உள்ளார்

ஏற்கனவே அவர் இந்தியர்கள் சிலரது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தார்த் சுக்லாவுக்கு இரங்கல் தெரிவித்து ஜான்சேனாவின்  பதிவு செய்த 4 மணி நேரமே ஆகியுள்ள நிலையில் சுமார் ஏழு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.