'புஷ்பா' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட யாஷிகா ஆனந்த: வைரல் வீடியோ


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ படத்தின் பாடல் ஒன்றுக்கு நடிகை யாஷிகா ஆனந்த் செம ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
தமிழ் திரையுலகில் நடிகைகளில் ஒருவரான யாஷிகா ஆனந்த் சமீபத்தில் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார் என்பதும் அதன் பின் அவர் கடந்த 6 மாதத்தில் பெற்ற சிகிச்சையால் படிப்படியாக குணமாகி தற்போது அவர் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் யாஷிகா ஆனந்த் சற்று முன்னர் ’புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ’சாமி சாமி’ என்ற பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார். பாவாடை தாவணி காஸ்ட்யூமில் அவர் ஆடியுள்ள இந்த டான்ஸ் வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பதும், இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.