close
Choose your channels

பிரபல நடிகரின் அடுத்த படத்தில் யோகிபாபு-சூரி

Tuesday, May 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்கள் இணைந்து நடிப்பது அரிதான ஒன்றாகவே இருந்து வரும் நிலையில் தற்போது ஒரு படத்தில் முன்னணி காமெடி நடிகர்களான யோகிபாபுவும் சூரியும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படம் தான் சிவகார்த்திகேயனின் 16வது படம்

'எஸ்கே 16' படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் என்றும், நாயகிகள் அனு இமானுவேல் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என்றும், நேற்று அறிவிப்பு செய்த இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் சற்றுமுன் இந்த படத்தில் யோகிபாபு, சூரி ஆகிய இருவரும் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

பாண்டிராஜ் இயக்கவுள்ள இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் ஆச்சரியத்தை தந்து கொண்டிருப்பதால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.