close
Choose your channels

சன் டிவிக்கு சென்றது யோகிபாபுவின் அடுத்த படம்

Friday, June 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு ஒரே நேரத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த சில படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படங்களில் ஒன்று ‘ட்ரிப்’. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை சன் டிவி நிறுவனம் பெற்று இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த படம் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகுமா? அல்லது திரையரங்குகளில் வெளியான பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

யோகிபாபு, சுனைனா, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். உதய்சங்கர் ஒளிப்பதிவில், தீபக் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சாய் பிலிம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.