close
Choose your channels

தமிழ் நடிகருடன் யார்க்கர் கிங் நடராஜன்: வைரல் புகைப்படங்கள்!

Saturday, July 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் யோகிபாபு உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தமிழகத்தின் யார்க்கர் கிங் நடராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

நடிகர் யோகி பாபுவும் யார்க்கர் கிங் நடராஜனும் நண்பர்கள் என்பது ஏற்கனவே தெரிந்ததே. யோகி பாபு நடித்த ’மண்டேலா’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் அந்த படத்தை பார்த்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த ஸ்ரீவத்ஸ கோஸ்வாமி பாராட்டியுள்ளார். இதனை அடுத்து யோகி பாபுவுடன் ஸ்ரீவத்ஸ கோஸ்வாமியை வீடியோ காலில் பேச வைத்தது நடராஜன் தான் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனது நண்பர் யோகி பாபுவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் இந்த புகைப்படத்தை நடராஜன் பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புகைப்படத்தின் பின்னணியில் உள்ள தொலைக்காட்சியில் கிரிக்கெட் மேட்ச் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது என்பதும் அதில் தல தோனி இருப்பதையும் கமெண்ட்டில் ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.