close
Choose your channels

அஜித் படத்திற்கு இசையமைக்கும்போது நான் பார்ப்பது இது ஒன்றை தான்: யுவன் ஷங்கர் ராஜா

Saturday, March 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் ’வலிமை’ திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் படங்களுக்கு இசையமைக்கும் போது ஒரு முக்கிய விஷயத்தை கவனித்துக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்

அஜீத் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்

அப்போது ’வலிமை’ படத்துக்கு இசை அமைப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் ’நான் எப்பொழுதும் அஜித் படத்திற்கு இசையமைக்கும் போது அவருடைய கேரக்டரை மட்டுமே மனதில் கொள்வேன். அவரது கேரக்டர் போலீஸா? அல்லது டானா? என்பதை பொறுத்து அதற்கேற்றவாறு நான் பின்னணி இசையை கம்போஸ் செய்வேன் என்று கூறினார்

மேலும் ’வலிமை’ படத்தின் அப்டேட் குறித்துக் கூறும் கூறியபோது ’அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது என்றும் விரைவில் தயாரிப்பு தரப்பில் இருந்து அப்டேட்டை வெளியிடுவார்கள் என்றும் கூறினார். மேலும் ’வலிமை’ படத்தில் அஜித் ரசிகர்களை திருப்திபடுத்துவதற்காக கூடுதலாக முயற்சி எடுத்து இசையமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.