close
Choose your channels

புலி-பாயும் புலி. என்ன வித்தியாசம்?

Thursday, July 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' திரைப்படமும், விஷால் நடித்து முடித்துள்ள 'பாயும் புலி' திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுவதால், ரசிகர்கள் குழப்பத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக 'பாயும் புலி' இயக்குனர் சுசீந்திரன், இந்த படத்தின் போஸ்டர் டிசைன்களை வித்தியாசமாக அமைக்க முடிவு செய்துள்ளாராம்.

ஏற்கனவே போஸ்டர்கள் அமைக்க திட்டமிட்டிருந்த ஸ்டில்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, புதிதாக போட்டோஷூட் நடித்து 'பாயும் புலி' போஸ்டரை கிராபிக்ஸ் இணைத்து வித்தியாசமான முறையில் பிரிண்ட் செய்யும் பணியில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


புலி, பாயும் புலி ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது மட்டுமின்றி இசை வெளியீட்டு விழாவும் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர் மன்றத்தின் மூலம் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குதல், நடிகர் சங்கத்தின் தேர்தல் பணிகள் ஆகியவற்றுக்கு இடையில் படப்பிடிப்புகளையும் திட்டமிட்டபடி தவறாமல் கவனித்து வரும் விஷாலின் சுறுசுறுப்பை எண்ணி அனைவரும் ஆச்சரியபடுவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.