close
Choose your channels

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' டீசர் ரிலீஸ் எப்போது?

Tuesday, June 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் மீண்டும் சமீபத்தில் தொடங்கப்பட்டு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் தீபாவளி தினத்தில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'விஸ்வரூபம் 2' படத்தின் டீசர் பணிகள் நடைபெற்று வருவதாகவும் வரும் ரம்ஜான் திருநாளில் இந்த படத்தின் டீசர் வெளிவர அதிக வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான 'தூங்காவனம்' படத்திற்கு பின்னர் கமல்ஹாசன் நடித்த படம் எதுவும் வெளிவராத நிலையில் 'விஸ்வரூபம் 2' படத்தின் டீசர், கமல் ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்து இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.