close
Choose your channels

கோலிவுட்டின் செண்டிமெண்ட்டை உடைத்த 'தல' தங்கை

Friday, November 13, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் பட டைட்டிலான 'தர்மதுரை' டைட்டில் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய இயக்குனர் சீனுராமசாமி இயக்கவுள்ள நிலையில், இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

சமீபத்தில் வெளியான 'வேதாளம்' படத்தில் அஜீத் தங்கையாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய லட்சுமிமேனன், தர்மதுரை' படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடி சேரவுள்ளதாக கூறப்படுகிறது.

தங்கை கேரக்டரில் நடித்தால் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காது என்ற கோலிவுட்டின் செண்டிமெண்ட்டை தற்போது லட்சுமிமேனன் உடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 'தல'க்கு தங்கையாக நடித்தாலும் அவருக்கு தொடர்ந்து ஹீரோயின் வேடம் தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.