close
Choose your channels

நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று முதல்வருடன் சந்திப்பு?

Monday, November 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மாநிலத்தின் பல பகுதிகள் மிதந்து வருகின்றன. மீட்புக்குழுவினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் சார்பில், முதல்வர் ஜெயலலிதா அவர்களை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணத்திற்காக நிதிகொடுக்க புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

இன்று முதல்வர் அவர்களை நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் நேரில் சந்தித்து நிதியளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர்கள் பலர் தங்கள் ரசிகர் மன்றத்தினர் மூலம் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்து உதவியை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.