close
Choose your channels

பைக்கில் வந்த அஜித்: கரவொலி எழுப்பி வரவேற்ற 'வலிமை' படக்குழு!

Wednesday, November 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு பின்னர் கடந்த மாதம் சென்னையில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன்பின் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கியது என்பது குறித்து செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று முதல் ’வலிமை’ படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டார். அவர் ஐதராபாத்தில் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து படக்குழுவினர் அனுப்பிய காரில் வராமல் தன்னுடைய சொந்த பைக்கிலேயே ஓட்டலில் இருந்து ராமோஜிராவ் பிலிம்சிட்டிக்கு வந்தார். அவர் சாலையில் பைக்கில் செல்லும் போது ரசிகர்கள் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு நடிகர் அஜித் விமானத்தில் செல்லாமல் தன்னுடைய சொந்த பைக்கிலேயே சென்றார் என்ற செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இம்மாதம் முழுவதும் படமாக்கப்படும் என்று படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச போலீசாக அஜித் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ஹூமா குரோஷி நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.