close
Choose your channels

24' படத்தில் சூர்யாவின் 3 வேடங்கள் என்னென்ன? புதிய தகவல்

Wednesday, January 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் விக்ரம்குமார் இயக்கியுள்ள '24' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் சூர்யா, சமந்தா, நித்யாமேனன், அஜய், சத்யன், சரண்யா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


இந்த படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் சூர்யாவின் மூன்று கேரக்டர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் அண்ணன் மற்றும் தம்பி என்ற இரண்டு வேடங்களிலும், அண்ணன் கேரக்டரின் மகனாக மூன்றாவது வேடத்திலும் சூர்யா நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.