close
Choose your channels

கிறிஸ்துமஸ் ரிலீஸ் பட்டியலில் குவியும் படங்கள்

Monday, November 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அடுத்த பெரிய படங்களின் ரிலீஸ் கிறிஸ்துமஸ் திருநாளில் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் திருநாள் வெளியீடாக ஏற்கனவே விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' மற்றும் தனுஷின் மாரி 2' திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பட்டியலில் சிவகார்த்திகேயனின் 'கனா' எந்த நேரத்திலும் இணைய வாய்ப்பு உள்ளது.

அதுமட்டுமின்றி கார்த்தியின் 'தேவ்', ஜிவி பிரகாஷின் 'சர்வம் தாளமயம்', விஷ்ணுவின் 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், அதர்வாவின் 'பூமராங்' ஆகிய படங்களும் கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது,

அதேபோல் நயன்தாராவின் 'ஐரா', 'விக்ரம் பிரபுவின் 'துப்பாக்கி முனை', ஜெயம் ரவியின் 'அடங்கமறு', விக்ரமின் 'துருவ நட்சத்திரம்',ஆகிய படங்களும் டிசம்பர் அல்லது ஜனவரியில் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.