சசிகலாவுடன் பிரபல நடிகர் சந்திப்பு: தேர்தல் கூட்டணியா?
சசிகலாவை பிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான சரத்குமார் திடீரென சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை முடித்து சமீபத்தில் விடுதலையான சசிகலா, அதிமுகவை கைப்பற்றுவார் என்றும் அவரை நோக்கி அதிமுகவின் முன்னணி தலைவர்கள் செல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை ஒரு அதிமுக பிரபலம் கூட சசிகலா பக்கம் போகவில்லை என்பதும் அதிமுக வழக்கம்போல் இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் சசிகலா வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் டிடிவி தினகரனின் அமமுக புதிய கூட்டணியை அமைக்கும் என்றும் அரசியல் கட்சி விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சசிகலாவை சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பில் இருவரும் அரசியல் கூட்டணி குறித்துப் பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சரத்குமார் அதிமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் அவர் சசிகலாவை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.