close
Choose your channels

அஜித்தின் 'வலிமை' படத்தில் இடம்பெற்ற மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்!

Wednesday, February 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் நாளை உலகம் எங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தில் மறைந்த பழம்பெரும் நடிகர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் இடம்பெற்றுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் உலகம் முழுவதும் ஹிட்டானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பாடலில் இடம்பெற்ற ஒரு காட்சியில் பழம்பெரும் நடிகர் மறைந்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் புகைப்படம் மாலை இட்டபடி இருக்கும் காட்சி உள்ளது. இதனை அடுத்து அஜீத்தின் மறைந்த தந்தையாக ஜெய்சங்கர் இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே ஜெய்சங்கரின் மகன் டாக்டர் விஜய் சங்கரும், அஜித்தும் நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில் தற்போது அஜித் படத்தில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் புகைப்படம் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ் சினிமாவின் முதல் ஜேம்ஸ்பாண்ட் நடிகரான மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு ஒரு அதிரடி ஆக்சன் படத்தில் மரியாதை செலுத்தும் விதமாக இயக்குனர் எச்.வினோத், அவருடைய புகைப்படத்தை இந்த படத்தில் பயன்படுத்த உள்ளதாகவும் தெரியவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.