close
Choose your channels

ஹாலிவுட் படத்தில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தமா? 

Tuesday, April 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் பிரபாஸ் நடித்த ’ராதே ஷ்யாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது ஆதிபுருஷ், சலார் உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஹாலிவுட் படமொன்றில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹாலிவுட்டில் பல வெற்றிப்படங்களை தயாரித்த யுனிவர்சல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் பிரபாஸ் நடிக்க இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தில் நடிக்க பிரபாஸ் விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நடிகை சமந்தா ஹாலிவுட் படத்தில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமான நிலையில் தற்போது பிரபாஸ் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.