close
Choose your channels

நடிகர் சோனுசூட் மகன், மகளா இவர்கள்? வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்..!

Monday, March 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல வில்லன் மற்றும் குணசுத்திர நடிகரான சோனு சூட் மனைவி மற்றும் மகன், மகள் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகர் சோனு சூட் என்பதும், இவர் நடிகர் என்பதையும் தாண்டி கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு தனது சொந்த பணத்தை கோடி கணக்கில் செலவு செய்தார் என்ற வகையில் மக்கள் மத்தியில் ஹீரோவாக அவதாரம் எடுத்திருந்தார் என்பதும் தெரிந்தது.

விஜயகாந்த் நடித்த ’கள்ளழகர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர் அதன் பிறகு விஜய் நடித்த ’நெஞ்சினிலே’ அஜித் நடித்த ’ராஜா’ ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். அனுஷ்கா நடித்த ‘அருந்ததி’ என்ற திரைப்படம் தான் இவருக்கு திருப்புமுனையை கொடுத்தது என்பதும் அதன் பிறகு அவர் பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சோனு சோர்ட் கடந்த 1996 ஆம் ஆண்டு சோனாலி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மனைவி, மகன், மகளுடன் இருக்கும் சோனு சூட் இருக்கும் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.