close
Choose your channels

சூப்பர் ஸ்டார் பெயரில் நடிக்கும் செல்வராகவன்.. 'மார்க் ஆண்டனி' படத்தின் மாஸ் ஸ்டில்..!

Monday, March 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்து வரும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே எஸ்ஜே சூர்யா உள்பட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் செல்வராகவன் இணைந்துள்ளதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் செல்வராகவன் ’சாணிக்காயிதம்’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார் என்பதும் அதன் பிறகு அவர் ’பீஸ்ட்’ மற்றும் ’பகாசூரன்’ ஆகிய படங்களில் நடித்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்திலும் செல்வராகவன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் இந்த திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி என்ற பெயரில் நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வராகவன் கேரக்டரின் மாஸ் போஸ்டர் ரிலீசாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில்

’மார்க் ஆண்டனி’ படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில், டிஎஸ்ஜி, ரிதுவர்மா, உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos