close
Choose your channels

சசிகலாவை சிறையில் சந்தித்த பிரபல நடிகை

Saturday, January 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்கை கவனித்து வருகின்றன.

இந்த நிலையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான நடிகை விஜயசாந்தி, இன்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு அமமுகவின் ஆதரவை பெற சசிகலாவிடம் விஜயசாந்தி பேசியிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை விஜயசாந்தி ஆர் கே நகர் இடைத்தேர்தலின் போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் என்பதும், சசிகலாவின் கணவர் நடராஜன் மறைந்த போது சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.