close
Choose your channels

வயசான காலத்துல இது தேவையா? பிகினி வீடியோ கமெண்டுக்கு நடிகை கஸ்தூரியின் பதிலடி!

Sunday, January 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கஸ்தூரி நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் இருக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஒரு ரசிகர் ’வயதான காலத்தில் இது தேவையா?’ என கமெண்ட் பதிவு செய்துள்ளார். இந்த கமெண்ட்க்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகின் நடிகையும், பிக் பாஸ் போட்டியாளருமான கஸ்தூரி தனது சமூக வலைதளத்தில் போல்டான கருத்துக்களை பதிவு செய்து வருவார் என்றும் அவ்வப்போது அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’அக்னி நட்சத்திரம்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’ஒரு பூங்காவனம்’ என்ற பாடலின் பின்னணியில் இன்ஸ்டாகிராமில் நடிகை கஸ்தூரி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் காட்சிகள் உள்ளன.

இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்துள்ள நிலையில் கமெண்ட் செய்துள்ள ஒரு நெட்டிசன் ’வயசான காலத்துல தேவையா இதெல்லாம்’ என்று பதிவு செய்துள்ளார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள கஸ்தூரி, ‘ஆமாம் உங்க வயசுக்கு உங்களுக்கு தேவையே இல்லை, போங்க, போய் ராமாயணம் படிங்க’ என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos