close
Choose your channels

நடிகை மீனா இதுவரை நடிக்காத கேரக்டர்.. விறுவிறுப்பான படப்பிடிப்பு..!

Wednesday, September 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மீனா இதுவரை நடிக்காத கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி அதன் பின் கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களுடன் நடித்தவர் நடிகை மீனா. இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் கடந்த ஆண்டு உடல் நல கோளாறு காரணமாக காலமான நிலையில் அதன் பின் நடிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் நடிக்க தொடங்கியுள்ளார். ஏற்கனவே ’ரெளடி பேபி’ என்ற படத்தில் நடித்து வரும் மீனா, தற்போது மலையாளத்தில் ’அனந்தபுரம் டைரிஸ்’ சென்ற படத்தில் நடித்து வருகிறார். கதையின் நாயகியாக நடித்து வரும் மீனா இந்த படத்தில் வழக்கறிஞர் நடிக்கிறார். வழக்கறிஞர் கேரக்டரில் மீனா நடிப்பது இதுதான் முதல் முறை.

இந்த படத்தில் ஸ்ரீகாந்த், மனோஜ் கே ஜெயன் உட்பட பலர் நடிக்கிறார்கள் என்பதும் இந்த படத்தை ஜெய ஜோஸ் ராஜ் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் மீனாவின் ஸ்டில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.