close
Choose your channels

டால்பினுடன் முத்தமிட்டு விளையாடும் பிரபல நடிகை… வைரல் புகைப்படம்!

Saturday, January 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவருபவர் நடிகை லட்சுமி ராய். இவர் “தாம் தூம்“, “காஞ்சனா“, “அரண்மனை“, “மங்காத்தா“ போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். பின்னர் தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தார்.

சமீபத்தில் நடிகை லட்சுமி ராய் நடிப்பில் “சிண்ட்ரெல்லா“ திரைப்படம் வெளியாகி ரசிர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை லட்சுமி ராய் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். மேலும் அங்குள்ள Dolphinarium க்கு சென்ற நடிகை லட்சுமி ராய் டால்பின்களுடன் கொஞ்சி விளையாடி இருக்கிறார்.

தமிழ் பிரபலங்கள் பலரும் சமீபகாலமாக துபாய்க்குப் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர்- சூர்யா- ஜோதிகா ஜோடியைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் தனது குடும்பத்துடன் துபாய்க்கு சென்றுள்ளார். அவரைப் போலவே நடிகை அமலாபால், தொகுப்பாளினி டிடி போன்றோரும் துபாய்க்கு விஜயம் செய்துள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகை லட்சுமி ராயும் துபாயில் தனது விடுமுறை நாட்களை கழித்துவருகிறார்.

இதையடுத்து நடிகை லட்சுமி ராய் நீச்சல் குளத்தில் டால்பின்களுடன் கொஞ்சி விளையாடி இருக்கிறார். மேலும் அவர் தனது கன்னத்தை காட்ட டால்பின் அவருக்கு முத்தமும் கொடுக்கிறது. இதனால் மகிழ்ச்சியில் நடிகை லட்சுமி ராய் துள்ளிக்குதிக்கும் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.