close
Choose your channels

மம்முட்டியின் அடுத்த படத்தில் இணைந்த சன்னிலியோன்

Monday, January 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த 'பேரன்பு' வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் 'மதுரராஜா' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் மம்முட்டியுடன் ஜெய், ஜெகபதிபாபு, சித்திக், அஜு வர்கீஸ், அனுஸ்ரீ, நெடுமுடி வேணு உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. தற்போது இந்த பாடலின் படப்பிடிப்பிற்காக சன்னிலியோன் கேரளா வந்துள்ளார். மம்முட்டி, சன்னிலியோன் இணைந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.