close
Choose your channels

ஹோலி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிய தமிழ் நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்: வைரல் வீடியோ

Monday, March 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொலைக்காட்சி ஒன்றுக்காக ஹோலி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிய தமிழ் நடிகைக்கு திடீரென ஏற்பட்ட விபரீதம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழில் என் சகியே, முத்திரை உள்பட ஒருசில படங்களில் நடனம் ஆடி இருக்கும் நடிகை ராக்கி சாவந்த், கன்னடம், இந்தி, மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஹோலி பண்டிகைக்காக ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சியில் நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த மேலாடை திடீரென கிழிந்தது. இதனால் மிகுந்த அவமானம் அடைந்த அவர் டென்ஷனாகி காஸ்ட்யூம் டிசைனர்களை திட்ட ஆரம்பித்தார்

இந்த லட்சணத்தில்தான் பிளவுஸ் தைப்பார்களா? ஒரு சில நிமிடங்கள் ஆடுவதற்குள் பிளவுஸ் கிழிந்துவிட்டது. ஊக்கு போட்டுக் கொண்டு எப்படி டான்ஸ் ஆடுவது? எனக்காக சக நடன கலைஞர்கள் காத்திருக்கிறார்கள்’ என்று ஆத்திரத்துடன் கூறினார். அப்போது காஸ்ட்யூம் டிசைனர் உதவியாளர் ஒருவர் அவருடைய பிளவுசை சரி செய்து கொண்டிருந்தார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.