close
Choose your channels

நடிகை வனிதாவின் தங்கைக்கு வந்த திடீர் ஆசை: ஆச்சரியத்தில் ரசிகர்கள்! 

Wednesday, September 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அவருடைய தங்கை ஸ்ரீதேவி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்

சத்யராஜ் நடித்த ‘ரிக்சா மாமா’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி அதன்பின் காதல் வைரஸ், ப்ரியமான தோழி, தேவதையை கண்டேன் உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு, கன்னட படங்களிலும் நாயகியாக நடித்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்த பின்னர் திரையுலகில் தலைகாட்டாத ஸ்ரீதேவி 2016ஆம் ஆண்டு லக்‌ஷ்மணா’ என்ற கன்னட படத்தில் மட்டும் நடித்தார். இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவிக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது திடீரென மீண்டும் அவருக்கு சினிமா ஆசை வந்துள்ளது போல் தெரிகிறது.

இதனை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் இன்றைய இளம் நடிகைகளுக்கு சவால் விடும்வகையில் இருப்பதால் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து அவருக்கு மீண்டும் திரையுலகில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.