close
Choose your channels

சிம்பு நடிப்பதாக இருந்த படத்தில் அதிதி ஷங்கர்.. ஹீரோ யார் தெரியுமா?

Thursday, March 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பதாக இருந்து அதன் பிறகு திடீரென அவர் அந்த படத்தில் இருந்து விலகிய நிலையில் அந்த படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு நடிப்பில் கோகுல் இயக்கத்தில் ’கொரோனா குமார்’ என்ற படம் உருவாக இருந்தது என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கூட நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. ஆனால் இந்த படம் திடீரென கைவிடப்பட்டதாகவும் அதற்கு காரணம் சிம்பு இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படம் தற்போது மீண்டும் தொடங்க இருப்பதாகவும் சிம்புவுக்கு பதிலாக விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் செய்தி வந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க அதிதி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் விஷ்ணு விஷால் அதிதி ஷங்கர் இருவரும் இணையும் இந்த படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு ஆரம்பத்தில் ’கொரோனா குமார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ’வைப் குமார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது விஷ்ணு விஷால், ‘ராட்சசன்’ ராம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் ‘வைப்குமார்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கார்த்தியின் ’விருமன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அதிதி ஷங்கர் அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படத்தில் நடித்த நிலையில் தற்போது அவர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து அவர் கோகுல் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வைப் குமார்’ படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.